யாத்திரை சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து
யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெரு (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 48 பேர் இருந்துள்ளதுடன், முருதலாவ நெல்லிகல வீதியிலுள்ள இடமொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் இந்த பேருந்தில் பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.