யாழில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 800 ரூபாய்க்கு விற்பனை
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் பருத்தித்துறை 2ம் குறுக்குத் தெரு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் மண்ணெண்ணெய் விற்பனை செய்தவரும் அதனை வாங்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
சுமார் 380 லீற்றர் மண்ணெண்ணெய்யை லீற்றர் 800 ரூபாய் வீதம் விற்பனை செய்தமை தொடர்பான தகவலின் அடிப்படையில்,
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் புலானாய்வு பிரிவினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போதே மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டதுடன், 380 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மண்ணெண்ணெய் விற்பனை செய்தவர் பருத்தித்துறையை சேர்ந்தவர் எனவும் அதனை வாங்கியவர் நாவற்குழி பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறினர்.