கடைக்கு வந்த நபரை வெட்டிக் கொலை செய்து தீ வைத்த பெண்
நபரொருவரை மன்னா கத்தியில் வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில நாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் நடத்தும் கடைக்கு வந்த நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று (25) பிற்பகல் குறித்த நபர் நாகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கடைக்கு வந்த போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த நபருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர் மன்னா கத்தியால் குறித்த நபரை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடையில் இருந்து பெற்றோல் போத்தலை எடுத்து இறந்தவரின் உடலில் வைத்து தீ வைத்து கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.