வெள்ளத்தில் மூழ்கியது கிளி​நொச்சி -இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கிளிநொச்சியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம், புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் தமது இருப்பிடங்களை விட்டு அயலவர், உறவினர் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அப்பகுதி தொடர்ச்சியாக வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது.

தருமபுரம் மத்தியகல்லுரி, தருமபுரம் இலக்கம் 1 பாடசாலை ஆகியவற்றுக்கு இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேச செயலகம் கிராமசேவையாளர் ஊடாக பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *