இன்று முதல் தாதிய உத்தியோகத்தர்களின் அதிரடி போராட்டம்
இன்று 25.07.2022 முதல் கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கு உட்பட்ட வைத்திய சாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.
கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த ஒய்வு மற்றும் விடுமுறை நாட்களுக்காக பணிபுரியும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் குறைக்கப்பட்ட ஓய்வு மற்றும் விடுமுறை தினங்களை விடுமுறையாக பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பல தடவைகள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் ஆளுனருக்கு கடிதம் மூலம் தொழிற்சங்கம் ஊடாகவும் அறிவிக்கப்பட்டிருந்தும் அது சம்பந்தமாக எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கிழக்கு மாகாண சுகாதார சேவைக்கு உட்பட்ட வைத்திய சாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமுகமளிக்கமாட்டார்கள் என அறிய முடிகிறது.