வெள்ளை கொடியால் மைனா கோ கமவில் பதற்றம்
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் இன்று அதிகாலை பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
போராட்டகாரர்கள் அந்த பகுதியில் ஏற்றியிருந்த வெள்ளை கொடியை பொலிஸார் அகற்ற முயற்சித்ததன் காரணமாகவே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் வெள்ளை கொடியை ஏற்ற முயற்சித்த போது நியாயமான காரணமும் இன்றி கொடியை ஏற்ற வேண்டாம் பொலிஸார் தெரிவித்து்ளளனர்.
எனினும் போராட்டகாரர்கள், பொலிஸாரின் ஆணையையும் மீறி அங்கு வெள்ளை கொடியை ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.