QR Code இற்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படும் இடங்கள்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம் இன்று (23) நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடங்கி தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று (22) கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பரீடசார்ந்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தேசிய மட்டத்தில் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இன்று தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பின்வருமாறு.