மது போதையில் அம்பிபுலன்ஸ் ஓடிய சாரதி – குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
மதுபோதையில் அம்பியூலன்ஸ் வாகனத்தை செலுத்திய சாரதி பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை நோக்கி பயணித்த குறித்த அம்பியூலன்ஸ், ஹட்டன் டிக்கோயா வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் முதலில் மோதியுள்ளது.
மது போதையில் சென்ற அம்பிபுலன்ஸ் வண்டி சாரதியால் ஏற்பட்ட விபரீதம் | Drunk Ambulance Driver
பின்னர், தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த குறித்த வாகனம் பின்னர் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.
அதன் பின்னர் சுமார் 100 மீற்றர் தூரம் முன்னோக்கி ஓடி ஒரு வீட்டினருகே இருந்த வேலியில் மோதி மற்றுமொரு முச்சக்கரவண்டியை மோதிவிட்டு நின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மற்றும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
அம்பியூலன்ஸ் வாகனம் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது அம்பியூலன்ஸ் சாரதி மதுபோதையில் பயணித்தமையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.