கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட 63 வயது நபர்
களனி, வராகொட பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குழுவொன்று அங்கிருந்தவர்களை தாக்கி தங்கப் நகைகள் மற்றும் வீட்டு உரிமை பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 11.30க்கும் 12.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நால்வர் வீட்டில் இருந்தவர்களை வாள்கள் மற்றும் தடிகளால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.