17 வயது சிறுமியை முகநூலில் விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர்

17 வயதான சிறுமி ஒருவருடைய முகநுால் கணக்கை திருடி அதே முகநுால் கணக்கைப் பயன்படுத்தி குறித்த சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டில் தொலைபேசி பழுது பார்க்கும் நபர் தொடர்பில் பண்டாரகம பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் தனது கைத்தொலைபேசியை சோதித்தபோது கையடக்கத் தொலைபேசியிலிருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி நீக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் குறித்த நபரிடம் கூறி புதிய முகநூல் கணக்கு ஒன்றை செயற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு நாட்களுக்குப் பின்னர் பல நண்பர்கள் குறித்த சிறுமியை தொலைபேசியில் அழைத்து, “என்ன செய்கிறீர்கள், பைத்தியக்காரத்தனமான காரியங்களைச் செய்யாதீர்கள்” என்று கூறியபோதே தனது முகநூல் கணக்கு இவ்வாறு திருடப்பட்டமை தெரிய வந்ததாகவும் அந்தச் சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.