கிளிநொச்சி – முகமாலையில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. நேற்று குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றை கையாண்டபோதே அது வெடித்துள்ளது.
தவறாக கையாள முயன்றதாகவும் அதனால் அது வெடித்த நிலையில் கைகளில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.