Day: March 20, 2023

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைப்புஇன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் ஒரு கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 120 ரூபாவில் இருந்து [...]

யாழ் அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு வன்புணர்வுயாழ் அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து கூட்டு வன்புணர்வு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமிக்கு மதுபானம் அருந்த கொடுத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு தாயாரிடம் [...]

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்புநீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

காலியில் 10 வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் (20-03-2023) காலி – தலாபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, தலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே [...]

முல்லையில் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்புமுல்லையில் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச் சேர்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந் நிலையில் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பினர், முன்னாள் வடமாகாணசபை [...]

மைதான தகராறு – கட்டையால் அடித்து பெண் கொலைமைதான தகராறு – கட்டையால் அடித்து பெண் கொலை

வலைப்பந்தாட்ட மைதானம் தொடர்பான தகராறு நீண்ட நேரம் தொடர்ந்ததை அடுத்து இன்று (20) இடம்பெற்ற கலகலப்பில் பெண் ஒருவர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முறுவ பிரதேசத்தில் வசித்து வந்த ஹெட்டியாரச்சி தயானி என்ற [...]

வித்தியா படுகொலை – பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுவீஸ் குமார்வித்தியா படுகொலை – பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சுவீஸ் குமார்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்றைய தினம் (20-03-2023) நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் அழைத்து வந்திருந்துள்ளனர். இதேவேளை, மரணதண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க [...]

முன்னாள் போராளி தாக்கியதில் இரு பொலிஸார் படுகாயம்முன்னாள் போராளி தாக்கியதில் இரு பொலிஸார் படுகாயம்

கணவன் – மனைவி இடையில் நடந்த தகராறு தொடர்பாக விசாரிக்க சென்றிருந்த பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏ.றஹீம் [...]

தொதல் பொதியில் இறந்த எலி – அதிர்ச்சி சம்பவம்தொதல் பொதியில் இறந்த எலி – அதிர்ச்சி சம்பவம்

விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் சுற்றுலாத்தளமாக சிவனொளிபாத​மலை மாறிவிட்டது. அவ்வாறு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை கொள்வனவுச் செய்துள்ளனர். அதனை உண்பதற்காக, எடுத்து வெட்டிய போது அந்த [...]

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புபரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தரம் 5யில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய பின்னர் 153 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு [...]

முச்சக்கரவண்டி மீது லொறி மோதி கோர விபத்து – 13 வைத்தியசாலையில்முச்சக்கரவண்டி மீது லொறி மோதி கோர விபத்து – 13 வைத்தியசாலையில்

பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாரம்பனாவ பகுதியிலிருந்து பயணித்த சிறிய ரக லொறி ஒன்று சாரதியின் [...]

பல பெண்களை சீரழித்த பாதிரியார் சிக்கினார்பல பெண்களை சீரழித்த பாதிரியார் சிக்கினார்

பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவிலில் வைத்து தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிராமக விசாரணை நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. இவர் குழித்துறை தலைமையிடமாக [...]

பூநகரியில் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் – சிறிதரன் குற்றச்சாட்டுபூநகரியில் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் – சிறிதரன் குற்றச்சாட்டு

காலிமுகத்திடலில் கடலை தரையாக்கியும், பூநகரியில் தரையை கடலாக்கியும் ஒரு கிராமத்தை இல்லாது செய்யப்போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குற்றம் சாட்டுகின்றார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், [...]

60 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் – ஆசிரியர் பலி60 அடி பள்ளத்தில் வீழ்ந்த கார் – ஆசிரியர் பலி

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20.03.2023) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார். பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் [...]

மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – 7 பேர் காயம்மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதம் – 7 பேர் காயம்

பண்டாவளை – பூனாகலை கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பண்டாரவளை பகுதியில் (19.03.2023) நேற்று மாலை முதல் அடை [...]

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலிதுப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் பலி

பொத்துஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (19) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த [...]

விபத்தில் 15 வயது மாணவன் பலி – மேலும் இரு மாணவர்கள் படுகாயம்விபத்தில் 15 வயது மாணவன் பலி – மேலும் இரு மாணவர்கள் படுகாயம்

பாடசாலை மாணவர்களுடன் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கல்கமுவ – அதரகல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் வீழ்ந்ததில் [...]