நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு
காலியில் 10 வயதான சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றைய தினம் (20-03-2023) காலி – தலாபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
தலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தடாகம் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.