முச்சக்கரவண்டி மீது லொறி மோதி கோர விபத்து – 13 வைத்தியசாலையில்

பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாரம்பனாவ பகுதியிலிருந்து பயணித்த சிறிய ரக லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் லொறி வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியில் பயணித்த 11 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Related Post

750 ரூபாய்வரை உயர்த்தப்படவுள்ள சமையல் எரிவாயு விலை
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 12.5 கிலோ சிலின்டர் ஒன்றுக்கு 500 ரூபாய் [...]

யாழில் சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி [...]

அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்
யாழ்.மாவட்டத்தில் அரிசிக்கான நிர்ணய விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது [...]