Day: March 10, 2023

இரவில் வேலை முடித்து வீடு சென்ற 18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு – ஆபத்தான நிலையில்இரவில் வேலை முடித்து வீடு சென்ற 18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு – ஆபத்தான நிலையில்

வாதுவ பகுதியில் வேலை முடித்து வீட்டுக்கு கால்நடையாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர். பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு [...]

ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்புஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்பு

ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது. அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் [...]

வவுனியா பூவரசங்குளத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்புவவுனியா பூவரசங்குளத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் [...]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிப்புஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் அனைத்து [...]

“வடக்கின் போர்” நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி ஆரம்பம்“வடக்கின் போர்” நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை காலை ஆரம்பமாகியது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் [...]

முக்கிய அரச இணையத்தளங்களை முடக்கிய ஹக்கர்கள் – பறிபோன தகவல்கள்முக்கிய அரச இணையத்தளங்களை முடக்கிய ஹக்கர்கள் – பறிபோன தகவல்கள்

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹக்செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள்ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த தகவல்கள் ஹக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் [...]

ஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வுஜனாதிபதியாக மீண்டும் ஷி ஜின்பிங் தேர்வு

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங்(வயது 69) தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த ஓக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக ஷி ஜின்பிங் கட்சியின் தலைவராக [...]

முல்லைத்தீவில் 35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைதுமுல்லைத்தீவில் 35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் [...]

குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை – விசாரணை தீவிரம்குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை – விசாரணை தீவிரம்

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் [...]

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா கைதுகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா கைது

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு [...]

ரூபாயின் மதிப்பு 23% குறையும் – வெளியான எச்சரிக்கைரூபாயின் மதிப்பு 23% குறையும் – வெளியான எச்சரிக்கை

அமெரிக்க டாலருக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்து வரும் ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு 23% குறையும் என்று Fitch Solutions மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. Fitch Financial [...]

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழைமேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை

நாட்டின் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை [...]