வவுனியா பூவரசங்குளத்தில் வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியா குட்செட் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related Post

காதல் விவகாரம் – இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை
மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை [...]

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். [...]

இணையத்தளத்தில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் எலியின் தலை
கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகமொன்றில் இருந்து நேற்று (24) இணையதளத்தின் [...]