முல்லைத்தீவில் 35 லட்சம் ரூபா கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த 42 வயதான குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடம் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
Related Post

இரு கைதிகள் பலி – ஒருவர் ஆபத்தான நிலையில்
பன்றி இறைச்சி கறி சாப்பிட்டு உயிரிழந்த இரு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை [...]

இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் [...]

அடிக்கடி இன்று மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]