விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகை
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை பொறுப்புக்குரியவர்களிடம் ஒப்படைக்க இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதன்படி, ஜனாதிபதி மாளிகை இன்று மீண்டும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளனர்.