இலங்கையில் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல உள்நாட்டு
பத்திரிகைகள் சில செய்தி வௌியிட்டுள்ளன.
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 4ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாக பத்திரிகைகள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.