தனியாக வசித்த திருமணமாகாத 42 வயது பெண் குத்திக்கொலை
தெல்கொட, கந்துபோட பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 42 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவர், கடந்த 12ஆம் திகதி இரவு தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது, கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக, மெகவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்துபொட பிரதேசத்தில் உயிரிழந்தவர் நிர்மாணித்த இரண்டு மாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
எதிர் வீட்டில் வசிக்கும் அவரது சகோதரி, வீட்டில் விளக்கு எரியாமலிருந்ததை அவதானித்து, தொலைபேசியில் அழைத்துள்ளார். பதில் இருக்கவில்லை.
இதையடுத்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது, மாடி அறையில் உள்ள படுக்கையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான கலாசார திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணிபுரிந்த லங்கா கணேசி பனாபிட்டிய (42) என்ற பெண்ணே கொல்லப்பட்டார்.
வெளியிடத்திலிருந்து வந்து தேங்காய் பறிக்கும் ஒருவரில் சந்தேகமிருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.