பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கை
கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியின் நான்காவது டோஸைப் பெறுவதில் மக்களின் ஆர்வம் குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இதுவரை நான்காவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் குறைவாகவே இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
20 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் நான்காவது டோஸைப் பெற முடியும் என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
நான்காவது டோஸை பெற சுகாதார மருத்துவ அதிகாரியை சந்தித்து திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இந்தத் தடுப்பூசியைப் அனைவரும் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.