நாடாளுமன்ற சுற்றாடலில் நேற்றிரவு நடந்த மோதல்களில் 84 பேர் படுகாயம்

நாடாளுமன்ற சூழல் மற்றும் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில் இடம்பெற்ற மோதல்களில் 84 பேர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.காயமடைந்தவர்களுள் இராணுவ சிப்பாயொருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் இரு ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
நேற்றிரவு(13) வரையில் பொல்தூவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை, பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி
நேற்று(13) கொழும்பு – ஃபிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர்.
Related Post

பொலிஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பலி
கேகாலை – ரப்புக்கணை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த [...]

பங்களாதேஷில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
பங்களாதேஷ் கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை [...]

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் போட்ட கோழி
கேரளாவில் 6 மணி நேரத்தில் அடுத்தடுத்து 24 முட்டைகள் போட்ட கோழி ஒன்று [...]