இலங்கைக்கு வந்த 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சுமார் 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொிவித்திருக்கின்றது.
அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவர்கள் இதுவரையில், பிரதேச பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.