மாணவியின் கண் முன்னால் தாய் கழுத்தறுத்துக் கொலை – தந்தை தப்பி ஓட்டம்
துவிச்சக்கர வண்டியில் மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தாய் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொல்பிதிகம – தல்பத்வெவ என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
பொல்பிதிகம வடுபொலயாய பகுதியைச் சேர்ந்த தினுஷிகா மதுவந்தி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் தனது மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர்பாடசாலைக்கு அழைத்துச் செல்லும்போதே
அவரின் கணவர் இவ்வாறு கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரான கணவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.