பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு
எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
35 சதவீதத்தினால் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.