யாழ். இணுவிலில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு
யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளான்.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சதீஸ் யோகராசா (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் அறைக்குச் சென்றவர் மின் வயரில் இருந்த மின் கசிவில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.