குழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி – இருவர் அதிரடி கைது
கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இந்த சம்பவத்தில் டக்வாரி தோட்டத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ள நிலையில், மீண்டும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.