யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல் – இளைஞன் மரணம்
ஒன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நெஞ்சுவலி காரணமா யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 19ம் திகதி இரவு 8.30 மணியளவில் யாழ்.மணிக்கூட்டு கோபுர வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஊடக பயிலுனரான நண்பருடன் குறித்த இளைஞர் சென்றுள்ளார்.
இதன்போது வரிசையை மீறி உள்ளே நுழைந்த சிலர் எரிபொருள் நிரப்புவதற்கு முயற்சித்துள்ளனர். இதனையடுத்து ஊடக பயிலுனர் அதனை வீடியோ பதிவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் அவருடைய கையை பிடித்து முறுக்கி மடக்கியுள்ளார். இதற்கிடையில் நியாயம் கேட்க சென்றிருந்த குறித்த இளைஞன் மீது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிலர் தலைக்கவசத்தால் தாக்கிய நிலையில்
மூக்கு மற்றும் வாயினால் இரத்தம் வடிந்தபடி வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு மறுநாள் காலை நெஞ்சுவலி மற்றும் சோர்வு எற்பட்டதை தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உடுவில் – செம்பாலை பகுதியை சேர்ந்த செ.பிரசாந் (வயது 27) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.