அம்பாறையில் மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞர் மரணம்
அம்பாறை, அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்று, முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக் அபான் என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் வீடு ஒன்றின் மேல் மாடியில் சுவருக்கான வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.