யாழில். 17 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை கடந்த 18ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தன் மற்றும் மருத்துவ நிபுணர்கள்,
மருத்துவத்துறையினரின் பங்களிப்பில் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுநீரக தேவைப்பாடுடைய சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடனடியாக சிறுநீரக தானம் செய்ய முன்வந்ததை தொடர்ந்தே மருத்துவர்கள் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்துள்ளனர்.
உயிருடன் இருக்கும் ஒருவரின் சிறுநீரகத்தை பெற்று, இன்னொருவருக்கு பொருத்துவது என்பது தமது மருத்துவ வட்டாரத்திலேயே மைல்கல் என யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெருமை கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.