மதுபான நிலையங்களுக்கு பூட்டு
மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் விடுதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், எதிர்வரும் 13ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.