காதலியுடன் விடுதிக்கு சென்றவருக்கு நேர்ந்த கதி
முகநூல் ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்தி, ஆணை விடுதிக்கு அழைத்துச்சென்று, மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
முகநூல் மூலம் நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு நேற்று சென்றுள்ளனர்.
இதன்போது, மதுபானத்தை அருந்தக்கொடுத்து 15 பவுன் நிறையுடைய 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
அந்நபர் சென்ற காரையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், அதனை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு அந்த பெண் தப்பிச்சென்றுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண் ஒருவரே இதனை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொரியாவிற்கு தொழிலுக்கு சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பிய ஒருவரிடமே தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.