முற்றாக முடங்கப்போகும் பேருந்து சேவை

நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபையினால் வழங்கப்படும் டீசல் தற்போது பற்றாக்குறையாக உள்ளது.
டீசல் இன்மையால், இன்றைய தினம் பெருமளவான பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. நாளைய தினம் இந்த நிலைமை மேலும் தீவிரமடையும்.
எரிபொருள் வழங்கப்படாமையால், அடுத்த வாரம் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Related Post

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகள் – தேடுதல் தீவிரம்
போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே [...]

விலைகள் அதிகரிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன [...]

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு நபர் மரணம்
இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டால் [...]