யாழில் இளம் பெண் மரணம் – பெரும் சோகம்
தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான சுதாகரன் துளசிகா (28) என்பவர் கடந்த 6ஆம் திகதி தீ காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.