5 பௌத்தர்கள் வாழும் இடத்தில் 25 பௌத்த விகாரை தேவையா?


5 அல்லது 6 பௌத்தர்கள் வாழும் வடமாகாணத்தில் 25 பௌத்த விகாரை எதற்கு என கேள்வி எழுப்பியிருக்கும் யாழ்.நயினாதீவு நாக விகாரையின் விகாராதிதி நவதகல பதும கீர்த்தி திசாநாயக்க,

இராணுவம் இராணுவத்தின் வேலைகளை செய்ய வேண்டும். மதகுருமார்கள் ஆலயம் தொடர்பான வேலைகளை செய்ய வேண்டும். இராணுவம் சாமி வேலையையும், கோவில் வேலையையும் பார்க்க கூடாது.

வேறு ஆட்களுடைய காணிகளை பிடித்து விகாரைகளை கட்டி வேறு சாமிகளுக்கு கொடுத்து இந்த நாடும் தொியாது, இந்த மாவட்டமும் தொியாத சாமிகளே இங்கு வந்திருக்கிறார்கள்.

அதற்கு நாங்கள் இருக்கிறோம். சாதுக்கள் இருக்கிறோம். பழமையான கோயில்கள் இருந்தால் பரவாயில்லை. புதிது புதிதாக நிர்மாணிக்கப்படும் வழிபாட்டிடங்களையே நான் கூறுகிறேன்.

நயினாதீவில் இத்தனை வருடங்களாக இருக்கிறேன். எனக்கு முன்னும் இருந்திருக்கிறார்கள். அவர்களோ அல்லது நானே இங்குள்ள இந்து மக்களை பௌத்தர்களாக மாற்ற நினைக்கவில்லை.

அத்துடன் நெடுந்தீவு, மாதகலில் இவ்வாறு விகாரைகளை அமைக்க வந்தபோதும் நான் அதற்கு இடமளிக்கவில்லை. நான் எப்போதும் மக்கள் பக்கத்தையும் சரியான பக்கத்தையுமே எடுப்பேன்.

நான் சிங்களவன் தான். இருந்தாலும் நேர்மை இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *