சிறுவர்களிடையே பரவும் வைரஸ் – காதார துறையினர் எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் சிறுவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும், ஒரு தடவை தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாராசிட்டமால் போன்றவற்றைக் குடிக்கக் கொடுத்து வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது கொடிய நோயல்ல என்றும்,
6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

பிரதமரின் வீட்டின் முன்னால் பாரிய போராட்டம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்காரணமாக [...]

விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்
காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து [...]

சிறுமியை தாயாக்கிய சித்தப்பா – 10 ஆண்டுகள் கடூழிய சிறை
16 வயதுக்கு குறைந்த சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்து சிறுமிக்கு குழந்தை [...]