விடுதிக்கு அழைத்துச் சென்று காதலியை விற்பனை செய்த காதலன்


காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் அறையில் தடுத்து வைத்து நான்கு பேருக்கு விற்பனை செய்ததாக அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி ஒன்றின் முகாமையாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய காதலன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அகலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பணத்திற்காக தனிநபர்களுக்கு விற்கப்படுவதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு அதிகாரிகளும் இணைந்து குறித்த பெண்ணை பொறுப்பேற்றதுடன் விடுதியின் முகாமையாளரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர் எனவும், அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *