யாழ் மானிப்பாயில் வாள்வெட்டு – 34 வயது நபர் படுகாயம்

இன்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வாள்வெட்டிற்கு இலக்கானவரது வீடானது வாள்வெட்டு நடந்த இடத்திற்கு அருகாமையிலேயே காணப்படுகிறது.
இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே வந்து வீதியில் நின்றவேளை முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வாள்வெட்டினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வன்முறை குறித்து எச்சரித்த பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை பதவி விலககோரி நடைபெற்ற போராட்டம் மீது அரசாங்க ஆதரவாளர்கள் [...]

யாழில் காணாமல்போன சிறுமி கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டார்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [...]

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் அதிகரிப்பு
ஆடைத் தொழில் துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான [...]