சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நபர்கள் கடல் வழிகள் ஊடாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.