யாழ் கொடிகாமத்தில் 11 மாத குழந்தை திடீர் மரணம்
திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்ட 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
யாழ்.கொடிகாமம் – தவசிகுளத்தை சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழுந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்றய தினம் காலை குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் பனடோல் கொடுக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் நிற்காமையால்,
மாலை 2 மணியளவில் மிருசுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழுந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
எனினும் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.