ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு
அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன செய்தி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் செயல்பட்டார்.
சிறந்த செய்தி வாசிப்பிற்கான விருதையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.