போதைப்பொருளை கடத்திய ஒருவருக்கு மரண தண்டனை
15 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெதிகம பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 2018 ஆம் ஆண்டு தெதிகம பாடசாலைக்கு அருகில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்த பின், நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா என நீதிபதி வினவியபோது, சந்தேக நபர் 8 வயது குழந்தையை கவனித்து வருவதாகவும், தனக்காக ஆஜரான சட்டத்தரணியால் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.