கொழும்பில் தொடரும் மர்மம் – மேலும் ஒரு சடலம்
கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பொலிஸாரால் இந்த சடலம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் குறித்த நபரின் அடையாளம் இதுவரை இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து மேலும் ஒரு சடலம் ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .