முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.