யாழ். நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் முறுகல்
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் பெற்றோல் பெறுவதற்காக நேற்று இரவு வரையில் பொதுமக்கள் வரிசையில் நின்றதை காண முடிந்ததுடன் சில இடங்களில் தகராறும் ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் நிர்வாகத்தினருடன் குழப்பத்தில் ஈடுபட்டதோடு எரிபொருள் கொள்கலனை திறந்து காண்பித்தால் மாத்திரமே தாங்கள் அவ்விடத்தைவிட்டுசெல்வோம்.
என கூறி குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தமது எரிபொருள் நிரப்பு நிலைய எரிபொருள் கொள்கலன்களை திறந்து காண்பித்த பின்னர்
நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர். இதேபோல் திருநெல்வேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் குழப்பம் உருவான நிலையில்,
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்டுத்தப்பட்டது. யாழ்ப்பாண குடாநாட்டில் இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.