பேருந்து மோதி வயோதிபர் பலி – சாரதியும், நடத்துனரும் தலைமறைவு
இ.போ.ச பேருந்து மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாத்தான்குளத்தை சேர்ந்த 74 வயதான முதியவர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து பேருந்து சாரதியும் நடத்துனரும் விபத்தின் பின்னர் அவ்விடத்தில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பட்டதால்,
விபத்துடன் தொடர்புடைய பேருந்தை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த பேருந்து சம்பவ இடத்திலிருந்து
பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மன்னார் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.