சீ.வி.விக்னேஸ்வரன் – கு.அண்ணாமலை இடையில் சந்திப்பு
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலை – நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சீ.சி.விக்னேஸ்வரன், கூறுகையில், நாட்டு மக்கள் அன்றாட தேவைக்கான பொருட்கள் மற்றும் எரிபொருள் இல்லை என்ற தட்டுப்பாட்டினை கண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தான் இருக்கின்றார்கள்.இந்தியா பொருளாதார ரீதியாக வடபகுதி மக்களுக்கு நன்மையினை பெற்றுக்கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நான் முன்னாள் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது வடக்கு மாகாணத்தினையும் கிழக்கு மாகாணத்தினையும் இணைக்கும் உயர்வீதி பாதையினை அமைக்க வேண்டும் என்று கரையோரமாக முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு பாதை அமைக்கவேண்டும் என்று கேட்டுயிருந்தேன்.
இதற்காக 1000 ரூபா கோடி ரூபா கணித்து இருந்தோம். அதற்கான சகல விபரங்களை கொடுத்து இருந்தோம். இதனை பற்றி இந்திய அரசாங்கத்துடன் கதைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியிருந்தார்.
ஆட்சி மாற்றம் ரீதியாக பொருளாதார ரீதியாக திட்டங்களாக அமைத்திருக்கின்றோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும் என்று எடுத்து அவர்களிடம் எடுத்து கூறியிருந்தேன்.13 வதுதிருத்த சட்டம் தொடர்பாக 06 கட்சிகள் சம்பந்தன் உட்பட்ட கையொப்பத்துடன் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தோம்.
13 வது திருத்த சட்டத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் எங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதை மனதில் வைத்து இருக்கவேண்டும் என்று தெரிவித்தேன். தமிழருக்கு அதிகாரம் குறைந்த சட்டம் என்றாலும் இப்போது இருப்பது 13 வது திருத்த சட்டம்தான் அதனையும் வெளியேற்றிவிட்டு
சிங்கள பௌத்த சட்டம் இருந்தால் தான் அதனை நாங்கள் கடிதமும் எழுதினோம் என்று கூறியிருந்தேன் என்று தெரிவித்தார். வேறு ஆட்சி மாற்றத்தின் ஊடாக பொருளாதார ரீதியாக முன்னெற்றத்தினை பெற்றுக்கொள்ளமுடியாது.
சில தலைவர்கள் சர்வதேச நாணய நிதியம் பேசும் போது சில தலைவர்களின் பேச்சு எடுபடும் சிலரின் பேச்சு எடுபடாது அவ்வாறான தலைவர்கள் இருந்தால் நல்லது இதில் தனிப்பட்ட பிரச்சனைகள் கூடும் வரிகளை கூட்டுவர்கள் சில பொருட்களின் விலையினைகூட்டுவார்கள்
இப்போது வருமானத்தினை கூட்டி செலவினத்தினை குறைக்கவேண்டும். இதுதான் காணப்படுகின்றது. இதில் நாட்டின் தலைவர்களின் கருத்துகளை கேட்பார்கள் மற்றவர்களுடைய கருத்தினை புறக்கணிக்க கூடும் அரசாங்கத்தின் மாற்றத்தினால்
நன்மைபெறும் என்று எதனையும் கூறமுடியாது. தலைனையினை மாற்றுகின்ற போது முன்னர் இருந்த அதே கட்சியினர் திருப்பவும் பிரிந்து அதே கட்சியில் இருக்கின்றனர். இந்த நாடகத்தில் இருக்கின்ற சூழல் காணப்படுகின்றது.
ஏதிர்கட்சியினர் கூறியிக்கின்றார் இதனை சேர்ந்து செயலாற்ற முடியாது என்று கூறியிக்கின்ற போது அதே முன்னோரு கட்சியில் இருந்த 11 கட்சியின் தலைவர்கள் நாடகம் போடப்பார்க்கின்றனர். மக்கள் கோரும் கோரிக்கைக்கு தலை அசைப்பதாக தெரியவில்லை
ஆட்சி மாற்றம் நிலையில் இன்னும் மயக்கநிலையில் தான் இருக்கின்றோம்.என்னவாக இருந்தாலும் இராணுவ ரீதியான இராணுவ கட்டமைப்பின் கீழ்தான் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். இது சரி இல்ல? நாங்கள் பொருளாதார ரீதியாக பிரச்சனைகளில் இருக்கின்றோம்
என்றால் இராணுவத்தினரின் தொகை நன்றாக குறையவேண்டும். போர் முடிந்ததுடன் இராணுவத்தினை குறைப்பதுதான் வழக்கம் இங்கு நடைபெறவில்லை எனவும் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.