முல்லைத்தீவில் 67 வயது பெண்ணுக்கு பலவந்தமாக மதுபானம் கொடுத்து துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில் வசிக்கும் 67 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 07.05.2022 அன்று இரவு தன்னுடைய பேத்தியின் 38 வயதான கணவனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் வந்து தனக்கு பலவந்தமாக சாராயம் பருக்கி துஸ்பிரயோகம் செய்ததாக கடந்த 08.05.2022 அன்று முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதான நபர் ஒருவர் முள்ளியவளை பொலிஸாரல் நேற்று (10) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தேக நபரை இன்று மாங்குளம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Related Post

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிசம் – 60 ஆண்டுகளின் தேவையை பூர்த்தியாக்கும்
மன்னார் படுகையில் சுமார் 5 பில்லியன் பீப்பாய்கள் எரிபொருளும் சுமார் 5 டிரில்லியன் [...]

தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் நெருக்கடி
சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு [...]

கிளிநொச்சியில் சொகுசு பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் (காணொளி)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் [...]