கிளிநொச்சியில் கர்ப்பவதி பெண் மற்றும் மாற்றுதிறனாளி மீது பொலிஸார் தாக்குதல்
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பவதி பெண் ஒருவர் மீதும், மாற்றுத்திறனாளி மீதும் தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது பொதுமக்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேசி பதற்ற நிலைமையினை சமாதானமாக முடித்துவைத்திருக்கின்றனர். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
இராமநாதபுரம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு ஆட்டோவில் சென்றிருந்த பொலிஸார் வீட்டில் கசிப்பு இருப்பதாக கூறி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதன்போது வீட்டிலிருந்தவர்கள் தர்க்கம் புரிந்ததால்
கர்ப்பவதி பெண் மற்றும் மாற்றுதிறனாளி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடிய கிராம மக்கள் பொலிஸாரை மடக்கி பிடித்து அடித்து நொருக்கியுள்ளனர்.
பின்னர் குழப்பமான நிலையேற்பட்டதை தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானமாக பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.