கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு
அஹங்கம – வல்ஹெங்கொட கடற்கரையில் இன்று (7) காலை சடலமொன்று மிதப்பதாக அஹங்கம பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.